பரங்கிபேட்டை பிரியாணி



தேவையானவை

  •  பட்டை -2சிறிய சுருள்
  •  சீரகம் -1டேபிள்ஸ்பூன்
  •  கசகசா - 1டேபிள்ஸ்பூன்
  •  கிராம்பு-10
  •  ஏலம்- 8
  •  வெள்ளை மிளகு - 1டேபிள்ஸ்பூன்
  •  சோம்பு -2 டேபிள்ஸ்பூன்
  •  உப்பு - தேவைக்கு
  •  பின்ச் ரெட்கலர்- 1பின்ச் மணம் அரைக்க :
  •  எலுமிச்சை -1பெரியது
  •  பாசுமதி அரிசி - ஒரு கிலோ
  •  தக்காளி -400கிராம் .
  •  முந்திரிபருப்பு-100கிராம் ஏலம்,பட்டை,கிராம்பு -தலா-2
  •  மட்டன் -ஒன்னேகால் கிலோ
  •  எண்ணெய் -150மில்லி
  •  நெய் - 100மில்லி
  •  பச்சைமிளகாய்-6 மல்லி,புதினா -ஒரு கட்டு இஞ்சி -75கிராம் மிளகாய்த்தூள்- 2டீஸ்பூன் தயிர்-200கிராம்
  •  வெங்காயம் -400கிராம்
  •  பூண்டு-100கிராம்
  •  சாஃப்ரான் -2




செய்முறை :

Step 1.
முதலில் காயவைத்து அல்லது லேசாக வெதுப்பி அரைத்து வைத்து கொள்ளவேண்டும் இந்த பொடியை தாள்சாவிற்கு உபயோகிக்கலாம்.

Step 2.
உங்கள் சுவைக்கு தக்கபடி நீங்கள் மொத்தம் 2- 3 டேபிள்ஸ்பூன் மணம் மட்டும் பிரியாணிக்கு உபயோகித்தால் போதுமானது .மிளகாய்த்தூள் பார்த்து உங்கள் காரத்திற்கு சேர்க்கவும்.

Step 3.
பின்னர் லைம் ஜூஸ்,கலர்,சாஃப்ரான் கலந்து ஊறவைக்கவேண்டும் .பின் கறியை நன்கு சுத்தம் செய்து கழுவி தண்ணீர் வடிகட்டி தயிர்,ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், பின்பு ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்,அரைத்த மணத்தில் ஒரு 2 -3 டீஸ்பூன்கலந்து ஊறவைத்து விரும்பினால் குக்கரில் 2விசில் வைத்து எடுக்கவும்,பின்பு வெங்காயம்,தக்காளி,மல்லி,புதினாவை நறுக்கி வைக்கவேண்டும்

Step 4.
. பின்பு இஞ்சி பூண்டு சேர்த்து அரைத்து வைக்கவும்,இஞ்சியை விட பூண்டு அதிகமாக இருக்க வேண்டும்.இஞ்சி பூண்டு காரமும் மணமும் தான் இந்த பிரியாணிக்கு தனிச்சுவையை கொடுக்கும். பின் அரிசியை கழைந்து அரை மணி முன்பாக ஊறவைக்கவும்.

Step 5.
பாத்திரத்தில் எண்ணெய்,நெய் விட்டு காய்ந்ததும் ஏலம்,கிராம்பு,பட்டை போட்டு வெடித்ததும் வெங்காயம் வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்,பின்பு ரெடி செய்த மணத்தில் 2 டேபிள்ஸ்பூன் சேர்க்கவும்.

Step 6.
அடுப்பை சிம்மில் வைத்து வதக்கவேண்டும் பின் நறுக்கிய மல்லி,புதினாவில் பாதி சேர்க்கவும்.வதக்கவும். நறுக்கிய தக்காளி,பச்சை மிளகாய் சேர்த்து,மிளகாய்த்தூள் சேர்த்து,உப்பு சேர்த்து சிம்மில் வைத்து மூடி தக்காளி வதங்கியதும் கறி,தயிர் சேர்த்து கிளறி விடவேண்டும்

Step 7.
.பின்னர் கறி ஓரளவு வெந்த பின்பு முந்திரி பருப்பை சேர்க்கவும்.பிறகு மூடி போட்டு 20 நிமிடம் வேகவிடவேண்டும் . ஓரளவு வெந்த பின் சிம்மில் வைத்து மசாலாவும் கறியும் சேருமாறு சிறிது நேரம் அடுப்பில் வைக்கவும். உப்பு சரிபார்க்கவும்.மீதியுள்ள பாதி நறுக்கிய மல்லி புதினா சேர்க்கவும். தப் போட்டு இறக்கவும்


No comments:

Post a Comment

Adbox