கத்திரி பிரியாணி




சமைக்க தேவையானவை

  •  பாசுமதி அரிசி - 250 கிராம்
  •  புதினா - கறிவேப்பிலை - கொத்தமல்லி - கைப்பிடி அளவு,
  •  கத்திரிக்காய் - 3 (சுமாரான அளவு, கசப்பில்லாதது)
  •  ஏலக்காய் விழுது - ஒரு டீஸ்பூன்
  •  இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு,
  •  தக்காளி - 3
  •  மிளகாய்த்தூள் - ஒன்றே கால் டீஸ்பூன்
  •  தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன்
  •  மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்,
  •  நெய் - 2 டீஸ்பூன்,
  •  எண்ணெய்
  •  உப்பு தேவையானளவு

உணவு செய்முறை : கத்திரி பிரியாணி

  • Step 1.

    முதலில் அரிசியை அரை வேக்காடாக வேக வைத்துக் கொள்ளவும். கத்திரிக்காயை வட்ட வட்டமாக நறுக்கி, உப்பு சேர்த்து எண்ணெயில் பொரித்தெடுத்து வைத்துக் கொள்ளவும்
  • Step 2.

    அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை வதக்கி... நறுக்கிய தக்காளி, இஞ்சி ... மிளகாய்த்தூள் - பூண்டு விழுது, தனியாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து மேலும் வதக்கவும்
  • Step 3.

    இதில் அரை வேக்காடாக வேக வைத்த சாதத்தை சேர்த்து நன்றாக கிளறி, அதில் பாதியை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொண்டு, பாத்திரத்தில் உள்ள கலவையில் கத்திரிக்காயை பரப்பி, எடுத்து வைத்துள்ள சாதத்தை அதன்மேல் பரப்பி, அதன்மேல் நெய் ஊற்றி, பாத்திரத்தை மூடி, சிறிது நேரம் சிறு தீயில் வைத்து இறக்கி, கிளறி பரிமாறவும்.

No comments:

Post a Comment

Adbox