தேவையானவை
- ஏலக்காய் - 2
- பூண்டு - 6 பல்
- நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
- மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
- பிரியாணி மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
- பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்)
- சோம்பு - அரை டீஸ்பூன்
- பிரிஞ்சி இலை - ஒன்று
- நறுக்கிய கொத்தமல்லித்தழை, புதினாத்தழை - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
- பட்டை - சிறிய துண்டு
- பெரிய வெங்காயம் - ஒன்று (நீளமாக நறுக்கவும்)
- ராகி சேமியா - ஒரு கப்
- தக்காளி - ஒன்று (நறுக்கவும்)
- நறுக்கிய பீன்ஸ், கேரட் - தலா 2 டேபிள்ஸ்பூன்
- பச்சைப் பட்டாணி - 50 கிராம்
செய்முறை :
Step 1.
முதலில் வாணலியில் நல்லெண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், சோம்பு, பூண்டு, பிரிஞ்சி இலை போட்டு வதக்கவேண்டும் .
Step 2.
பின் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, பச்சைப் பட்டாணி, பீன்ஸ், கேரட், புதினா, மஞ்சள்தூள் சேர்த்து மேலும் வதக்கவேண்டும் .
Step 3.
பிறகு இதில் 2 கப் நீர் விட்டு, பிரியாணி மசாலாத்தூள் சேர்த்து, சிறிதளவு நல்லெண்ணெய் விடவும் (இதனால் சேமியா உதிர் உதிராக வேகும்). இப்போது ராகி சேமியாவைப் போட்டு கிளறி, வெந்ததும் கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.


No comments:
Post a Comment