க்ரீன் பிரியாணி



தேவையானவை

  •  நெய், எண்ணெய்
  •  சதுரமாக நறுக்கிய உருளைக்கிழங்கு - கால் கப்
  •  உப்பு - தேவையான அளவு.
  •  ஏலக்காய் - 1
  •  கொத்தமல்லி, புதினா - தலா ஒரு கப்
  •  பச்சை மிளகாய் - 4
  •  பட்டை - ஒரு துண்டு
  •  கிராம்பு - 2
  •  பாசுமதி அரிசி - ஒரு கப்



செய்முறை : 

Step 1.
முதலில் அரிசியைக் கழுவி 10 நிமிடம் ஊற வைக்கவும். பின் கடாயில் எண்ணெய் விட்டு புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் மூன்றையும் வதக்கி, ஆற வைத்து, கெட்டியாக அரைக்கவும்.

Step 2.
பிறகு குக்கரில் நெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, நறுக்கிய உருளைக்கிழங்கு, அரைத்த மசாலா, உப்பு சேர்த்து நன்கு கிளறவும்

Step 3.
. நெய்யில் அரிசியை வறுத்து, குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். குக்கரை மூடி, மிதமான தீயில் வேக விட்டு ஒரு விசில் வந்ததும் இறக்கினால்... கமகம க்ரீன் பிரியாணி ரெடி!

No comments:

Post a Comment

Adbox