எம்டி பிரியாணி





தேவையானவை

  •  பாசுமதி அரிசி - ஒன்றரை கப்
  •  வெங்காயம் - 3
  •  இஞ்சி - ஒரு துண்டு
  •  பூண்டு - 7 பற்கள்
  •  பச்சை மிளகாய் - 2
  •  தக்காளி - 2
  •  புதினா, கொத்தமல்லித் தழை - தலா ஒரு கைப்பிடி அளவு
  •  மஞ்சள் தூள் - சிறிது
  •  பிரியாணி மசாலா - அரை தேக்கரண்டி
  •  மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
  •  எலுமிச்சை - பாதி ,உப்பு - தேவையான அளவு
  •  வறுத்து பொடிக்க :பட்டை - ஒரு துண்டு,லவங்கம்
  •  வறுத்து பொடிக்க : ஏலக்காய் - ஒன்று , சீரகம் - ஒரு சிட்டிகை
  •  வறுத்து பொடிக்க :சோம்பு - ஒரு சிட்டிகை,மிளகு - 4
  •  வறுத்து பொடிக்க : ஜாதிக்காய் , ஜாதிபத்திரி - கால் பாகம்
  •  வறுத்து பொடிக்க :நட்சத்திர மொக்கு - சிறு துண்டு
  •  தாளிக்க: பிரியாணி இலை - ஒன்று
  •  தாளிக்க: ஏலக்காய் - 2
  •  தாளிக்க:பட்டை - ஒரு துண்டு , லவங்கம் - 2
  •  தாளிக்க: எண்ணெய் - 3 மேசைக்கரண்டி


செய்முறை : 

Step 1.
முதலில் வறுத்து பொடிக்க வேண்டியவற்றை வெறும் கடாயில் லேசான தீயில் வைத்து வறுத்து, ஆறவைத்து பொடித்துக் கொள்ளவேண்டும் .

Step 2.
பிறகு அரிசியைக் களைந்து ஊற வைக்கவும்.பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும். பின்பு அத்துடன் நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவேண்டும் , தட்டிய இஞ்சி பூண்டு போட்டு வதக்கவும்.

Step 3.
வதங்கிய பின் நறுக்கிய தக்காளி மற்றும் பச்சை மிள்காய் சேர்த்து வதக்கவும்.தக்காளி குழைய வதங்கியதும் பொடியாக நறுக்கிய புதினா மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்து வதக்கவவேண்டும்

Step 4.
.பின்னர் தூள் வகைகள் சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும்.அத்துடன் 2 1/2 - 3 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். கொதி வந்த பின் அரிசியைத் தண்ணீரில்லாமல் வடித்து சேர்க்கவும்.

Step 5.
பின்பு ஒரு கொதி வந்ததும் மூடி போட்டு தீயைக் குறைத்து வைத்து வேகவிடவும்.முக்கால் பதம் வெந்ததும் பொடித்த மசாலா தூவி எலுமிச்சை சாறு பிழிந்துவிட்டு மூடி, 15 நிமிடங்கள் தம்மில் வைத்திருந்து எடுத்துக் கிளறிவிடவும்.

No comments:

Post a Comment

Adbox