தேவையானவை
- தேங்காய் எண்ணெய் - 100 மில்லி
- வவ்வால் மீன் (பாம்ஃபிரட்) - அரை கிலோ
- பட்டை - ஒன்று
- முந்திரி - அரை டேபிள்ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- உலர் திராட்சை - அரை டேபிள்ஸ்பூன்
- புதினாஇலை - 50 கிராம்
- எலுமிச்சைப்பழம் - ஒன்று (சாறு எடுக்கவும்)
- மல்லித்தூள் (தனியாத்தூள்) - 20 கிராம்
- கரம்மசாலாத் தூள் - அரை டேபிள்ஸ்பூன்
- பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 100 கிராம்
- கொத்தமல்லித்தழை - 50 கிராம்
- பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
- மிளகாய்த்தூள் - 30 கிராம்
- நெய் - 50 மில்லி
- பாஸ்மதி அரிசி - அரை கிலோ
- தயிர்- கால் கப் கிராம்பு - 4 தக்காளி - 50 கிராம்
- ஏலக்காய் - 2
- மஞ்சள் தூள் - 10 கிராம்
- இஞ்சி-பூண்டு விழுது - 50 கிராம்
செய்முறை :
Step 1.
முதலில் பாஸ்மதி அரிசியை 30 நிமிடம் ஊற வைக்கவேண்டும் பிறகு அடுப்பில் வாயகன்ற பாத்திரத்தை வைத்து நெய் ஊற்றி உருகியதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து சிவக்க வறுக்கவேண்டும் .
Step 2.
பிறகு ஊறிய பாஸ்மதியைச் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு 10 நிமிடம் வேக வைக்கவேண்டும் .
Step 3.
பிறகு ஒரு பாத்திரத்தில் இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்துக் கலந்து மீனில் இந்தக் கலவையைத் தடவி 15 நிமிடம் ஊறவைக்கவேண்டும் .
Step 4.
பின்னர் அடுப்பில் வாயகன்ற ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவேண்டும்
Step 5.
.பிறகு இதில் தக்காளியைச் சேர்த்து கரையும் வரை வதக்கி தயிர், உப்பு, மல்லித்தூள் (தனியாத்தூள்), கரம்மசாலாத் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் .
Step 6.
பின் இதில் ஊறவைத்த மீனைச் சேர்த்து 10 நிமிடம் வேகவைக்கவும். பிறகு இதை வெந்த சாதத்தோடு மெதுவாக அரிசி உடையாத அளவுக்குக் கலக்கவும்
Step 7.
. பின் இதில் நெய் ஊற்றி கிளறி, கொத்தமல்லிதழை, புதினா, முந்திரி, உலர் திராட்சை தூவி மூடவும். பின்னர் அடுப்பில் ஒரு பெரிய தோசைக்கல்லை வைத்து தீயை முற்றிலும் குறைத்து, அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைத்து 30 நிமிடம் ‘தம்’ போட்டு இறக்கிப் பரிமாறவும்.


No comments:
Post a Comment