தேவையானவை
- நெய் - 2 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தேங்காய்ப் பால் - அரை கப்
- எண்ணெய் - 3 டீஸ்பூன்
- தக்காளி - 3, பட்டை கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று
- உருளைக்கிழங்கு - 100 கிராம்
- இஞ்சி - பூண்டு விழுது - ஒன்றரை டீஸ்பூன்
- வெங்காயம் - ஒன்று
- தனியா - 150 கிராம்
- காய்ந்த மிளகாய் - 4
- பாசுமதி அரிசி - 250 கிராம்
செய்முறை :
Step 1.
முதலில் தனியாவை வறுத்து, குக்கரில் 2 தம்ளர் தண்ணீரில் நன்றாக வேக வைத்து, வடிகட்டி, ஒன்றரை கப் தண்ணீராக எடுத்து வைக்கவும். உருளைக்கிழங்கை தோல் சீவி, பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். காய்ந்த மிளகாயை விழுதாக அரைக்கவும்.
Step 2.
அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். பின் குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி - பூண்டு விழுது, நறுக்கிய தக்காளி, உருளைக்கிழங்கு, சேர்த்து நன்றாக வதக்கவும்.
Step 3.
இதனுடன் மிளகாய் விழுதையும் உப்பையும் சேர்த்து வதக்கி... தேங்காய்ப் பால், தனியா தண்ணீர் சேர்த்து, கொதித்ததும் அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கவும்.


No comments:
Post a Comment