- புழுங்கலரிசி - கால் கிலோ
- பிரியாணி இலை - ஒன்று
- பச்சை மிளகாய் - 3
- நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்
- இஞ்சி - சிறிய துண்டு
- மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
- பச்சைப் பட்டாணி - கால் கப்
- தேங்காய் - ஒரு துண்டு
- பூண்டு - 10 பல்
- பட்டை, ஏலக்காய், கிராம்பு - தலா 2
- புதினா, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு
- நாட்டுத்தக்காளி - 2,
- சின்ன வெங்காயம் - 8,
- உப்பு - ஒரு டீஸ்பூன்
- வெண்ணெய் - 2 டீஸ்பூன்
செய்முறை :
Step 1.
முதலில் சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவேண்டும் .பின் அரிசியை, உப்பு சேர்த்து அரை வேக்காடாக வேக வைத்துக் கொள்ளவேண்டும்
Step 2.
. பிறகு தேங்காய், புதினா, கொத்தமல்லி, பட்டை, கிராம்பு, பச்சை மிளகாய், ஏலக்காய், இஞ்சி, பூண்டு... இவை ஒவ்வொன்றையும் தனித்தனியாக அம்மியில் அரைக்கவேண்டும் .
Step 3.
பின்பு அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய், வெண்ணெய் சேர்த்து பிரியாணி இலை தாளித்து, வெங்காயம், தக்காளியை வதக்கி, அரைத்த விழுதுகளை ஒன்றன் பின் ஒன்றாகத் தனித்தனியாக போட்டு வதக்கவேண்டும் .
Step 4.
இப்பொழுது பச்சைப் பட்டாணியை சேர்த்து மேலும் வதக்கவும். உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும், எல்லாம் நன்றாக வதக்கியதும் வேக வைத்த சாதத்தை சேர்த்துக் கிளறி, பாத்திரத்தை மூடி, சிறிது நேரம் கழித்து இறக்கினால்... புழுங்கல் அரிசி பிரியாணி ரெடி.


No comments:
Post a Comment