பட்டர் பிரியாணி



தேவையானவை

  •  கிராம்பு, ஏலக்காய் - தலா 1
  •  வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
  •  உப்பு - தேவையான அளவு.
  •  பச்சைப் பட்டாணி - அரை கப்
  •  மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
  •  சீரகம் - அரை டீஸ்பூன்
  •  பாசுமதி அரிசி - ஒரு கப்


செய்முறை :

Step 1.
முதலில் குக்கரில் வெண்ணெயைப் போட்டு, உருகியதும் ஏலக்காய், கிராம்பு, சீரகம் தாளிக்கவும். பிறகு சீரகம் பொரிந்தவுடன் பச்சைப் பட்டாணியைச் சேர்த்து வதக்கவும்.

Step 2.
பின் ,ஊற வைத்து நெய்யில் வறுத்த அரிசி, மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். பிறகு, தண்ணீர் விட்டு குக்கரை மூடி, மிதமான தீயில் வேக விட்டு, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். விருப்பப்பட்டால் உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட்டையும் சேர்த்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Adbox