- பாசுமதி அரிசி - 2 கப்,
- சீரகம் - அரை டீஸ்பூன்,
- சோயா உருண்டைகள் - அரை கப்,
- சீரகம் - அரை டீஸ்பூன்,
- மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்,
- நறுக்கிய வெங்காயம் - கால் கப்,
- இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
- கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்,
- எண்ணெய், நெய் - தலா 2 டேபிள் ஸ்பூன்,
- தயிர் - அரை கப்,
- எண்ணெய், நெய் - தலா 2 டேபிள் ஸ்பூன்,
- உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
Step 1.
சோயா காய்கறி புலாவ் செய்முறை : பாஸ்மதி அரிசியைக் கழுவி, இரண்டரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கால் மணி நேரம் ஊற வைக்கவும். சோயாவைக் கொதிக்கும் நீரில் 5 நிமிடம் போட்டு, குளிர்ந்த நீரில் நன்றாக அலசி பிழிந்து வைக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து நெய், எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகம் தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். அதனுடன் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.
Step 2.
மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, சோயா உருண்டைகள், தயிர் சேர்க்கவும். இந்த கலவையுடன் ஊற வைத்த அரிசியை தண்ணீருடன் சேர்த்துக் கிளறி, குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் 2 நிமிடம் 'சிம்"மில் வைத்து இறக்கவும். சத்தான சுவையான சோயா காய்கறி புலாவ் ரெடி. இதற்கு சைடிஸ் ஆக தயிர் வெங்காயம் ரைத்தா சேர்த்து பரிமாறலாம் .


No comments:
Post a Comment