தேவையானவை
- தயிர் - 200 கிராம்
- இடியாப்பம் - 60
- இஞ்சி-பூண்டு விழுது - 3 டீஸ்பூன்
- கோழிக்கறி (சிக்கன்) - ஒரு கிலோ
- மஞ்சள்தூள் - சிறிதளவு
- பட்டை, லவங்கம், ஏலக்காய் - 10 கிராம்
- பெருஞ்சீரகத்தூள், சீரகத்தூள் - ஒரு ஸ்பூன் (விழுதாக அரைக்கவும்)
- முந்திரிப்பருப்பு, பாதாம் - தலா 25 கிராம் (விழுதாக அரைத்துக் கொள்ளவும்)
- பெரிய தேங்காய் - 1 (பால் எடுத்து கொள்ளவும்)
- நெய், தேங்காய் எண்ணெய் - 100 கிராம்
- பச்சை மிளகாய் - 10, ரம்ப இலை - 2
- கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
- சின்ன வெங்காயம் - 20 (பாதியை இரண்டிரண்டாகவும், மீதி பாதியைப் பொடியாகவும் நறுக்கவும்)
செய்முறை :
Step 1.
முதலில் கோழிக்கறியைக் கழுவி மஞ்சள்தூள், சீரகத்தூள், பெருஞ்சீரகத் தூள், உப்பு, தயிர், இரண்டாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், தயிர், ஏலக்காய், பட்டை, லவங்கம் சேர்த்து ஒன்றாகக் கலக்கவேண்டும்
Step 2.
. பிறகு பெரிய சட்டியை அடுப்பில் ஏற்றி, நெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவேண்டும் .
Step 3.
இப்பொழுது இத்துடன் இஞ்சி - பூண்டு விழுது, கறிவேப்பிலை சேர்த்து மிதமான தீயில் வதக்கவேண்டும் . பின்பு இதில் கோழிக்கறிக் கலவையைக் கொட்டி நன்றாக கிளறி, அடுப்பை சிம்மில் வைத்து மூடி போட்டு வேக விடவேண்டும் .பின்பு அடிபிடிக்காமல் அடிக்கடி கிளறவேண்டும்
Step 4.
.பின்னர் எண்ணெய் பிரிந்து வரும் போது தேங்காய்ப் பாலை ஊற்றி, முந்திரி பாதாம் விழுது சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவேண்டும் .
Step 5.
இப்பொழுது இடியாப்பத்தை ஒன்றிரண்டாகப் பிய்த்து வைக்கவேண்டும் . பின்னர் கொதித்த கலவையில் இடியாப்பம் மற்றும் கொத்தமல்லித்தழை தூவி 5 நிமிடம், `தம்’ போடவும்.
Step 6.
சுவையான கமகமக்கும் இடியாப்ப பிரியாணி தயார்.


No comments:
Post a Comment