தேவையானவை
- பிரியாணி இலை - 3
- உப்பு - 3 மேசைக்கரண்டி
- கலர் பொடி - சிறிதளவு
- நெய் - 5 தேக்கரண்டி
- புதினா - 1 கப்
- கொத்தமல்லி - 1 கப்
- கறிவேப்பிலை - 2 கொத்து
- எலுமிச்சை - 1
- கரம் மசாலா - 1தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- மிளகாய் தூள் - 1 1/2 மேசைக்கரண்டி
- கிராம்பு - 10
- தயிர் - 1 கப்
- இஞ்சி, பூண்டு விழுது - 2 1/2 மேசைக்கரண்டி பட்டை - 3
- அன்னாசி மொக்கு - 2
- பச்சை மிளகாய் - 6
- தக்காளி - 6
- பெரிய வெங்காயம் - 6
- பாசுமதி அரிசி - 1 கிலோ
- மட்டன் - 1 கிலோ
செய்முறை :
Step 1.
முதலில் அரிசியில் தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் ஊற வைக்கவேண்டும் . பிறகு வெங்காயம், தக்காளி இரண்டையும் மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளுங்கள் .
Step 2.
பிறகு பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி வைத்துக் கொள்ளவேண்டும். பின் புதினா கொத்தமல்லி தழைகளை கழுவி வைக்கவேண்டும் . பின்பு கறியினை சுத்தம் செய்து மஞ்சள் தூள் போட்டு கழுவி வைக்கவேண்டும் .
Step 3.
பிறகு அதில் தயிர் பாதி, இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள் மற்றும் உப்பு போட்டு கிளறி வைக்கவும் பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி மொக்கு, பிரியாணி இலை போட்டு பொரிய விடவும். பின் உடனே நறுக்கின வெங்காயம் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
Step 4.
பிறகு அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, கீறின பச்சை மிளகாய் போட்டு 3 நிமிடம் வதக்கவும். பிறகு நறுக்கின வெங்காயம், தக்காளி, கறியை போட்டு வதக்கவும்.
Step 5.
தக்காளி நன்கு வதக்க வேண்டும். புதினா கொத்தமல்லி போட்டு வதக்க வேண்டும். இப்பொழுது இதனுடன் கறி துண்டங்களைப் போட்டு மசாலா கறி துண்டங்களை சேரும்படி நன்கு பிரட்டி விடவும்.
Step 6.
பின் அதில் ரம்பை இலை, தயிர், கரம் மசாலா சேர்த்து அதிக தீயில் வைத்து கிளறவும். பிறகு 6 கப் தண்ணீர் சேர்த்து கலர் பொடி, உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்து கிளறி மூடி விடவும்.
Step 7.
சுமார் 15 நிமிடம் கழித்து, கொதித்து வாசனை வந்ததும் அரிசியை களைந்து போட்டுக் கிளறி விடவும். முக்கியமாக தண்ணீர் 1 கப் அரிசிக்கு இரண்டு என்ற விகிதத்தில் வைக்கவும். வதக்கும் மாசாலாவில் தண்ணீர் இருக்கும் என்பதால் 1-க்கு 11/2 கப் ஊற்றவேண்டும்


No comments:
Post a Comment