காலிஃப்ளவர் கோபி பிரியாணி



தேவையானவை

  •  காலிஃப்ளவர் – 2
  •  பால் – 120 மில்லி
  •  எலுமிச்சைச்சாறு – 2 ஸ்பூன்
  •  உப்பு – தேவையான அளவு
  •  ஏலக்காய் – 6
  •  பச்சைமிளகாய் -8
  •  தக்காளி, இஞ்சி பூண்டு விழுது – தலா 150 கிராம்
  •  தயிர் – 75 மில்லி
  •  எண்ணெய்,
  •  முந்திரிப்பருப்பு – தலா 100 கிராம்
  •  துண்டு கிராம்பு – 4
  •  பட்டை – 2
  •  புதினா, கொத்தமல்லி – தேவையான அளவு
  •  மிளகாய்த்தூள் – அரை ஸ்பூன்
  •  வெங்காயம் – கால் கிலோ
  •  பாசுமதி அரிசி – அரை கிலோ


செய்முறை :

Step 1.
முதலில் காலிஃப்ளவரை சுத்தம் செய்துக் கொள்ளவும். அரிசியை 1 மணி நேரம் ஊற வைக்கவும். முந்திரிப்பருப்புடன், ஏலக்காய், பட்டை, கிராம்பு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும். பின்பு இஞ்சி பூண்டு விழுது, தயிர், தக்காளி, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

Step 2.
பின்பு காலிஃப்ளவர் துண்டுகள், புதினா, கொத்தமல்லி சேர்த்து கிளறவும். பின்னர் 4 கப் தண்ணீர், எலுமிச்சைச்சாறு சேர்த்து, ஒரு கொதி வந்ததும் அரிசியை சேர்க்கவும்.அரை வேக்காடு பதம் வெந்ததும் நெய் சேர்த்து கிளறி மூடவும். அதன் மேல் சுடு தண்ணீர் பாத்திரத்தை வைத்து தம் செய்து அடுப்பை சிம்மில்10 நிமிடம் வைத்து அணைக்கவும். பின்பு பரிமாறவும்.

No comments:

Post a Comment

Adbox