தேவையானவை
- தக்காளி - ஒன்று.
- மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன் (அல்லது தேவைக்கேற்ப)
- பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு - தலா 10 (ஊறவைக்கவும்)
- இஞ்சி - ஒரு சிறிய துண்டு
- மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
- பச்சை மிளகாய் – 2
- உப்பு - தேவைக்கேற்ப.
- எண்ணெய் - 6 டேபிள்ஸ்பூன்
- நறுக்கிய முருங்கைக்காய் துண்டுகள் – 12
- மிகச்சிறிய சதுரங்களாக வெட்டிய பனீர் - கால் கப்
- நெய் - 3 டீஸ்பூன்
- பெரிய வெங்காயம் – ஒன்று
- பாசுமதி அரிசி - 2 கப்
- தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன்
செய்முறை :
Step 1.
முதலில் அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் பாசுமதி அரிசியை 15 நிமிடம் ஊறவைக்கவும். குக்கரில் 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு... நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, உப்பு சேர்த்து, அரைத்த விழுதைப் போட்டு வதக்கி... மூன்றரை கப் நீர் விட்டு, அரிசி, தயிர் சேர்த்து குக்கரை மூடிவிடவும். ஆவி வந்ததும்,
Step 2.
குக்கரைத் திறந்து முருங்கைக்காயைச் சேர்த்து வெயிட் போடவும் (முருங்கைக்காயை முதலிலேயே சேர்த்தால் கரைந்துவிடும்). ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடவும்
Step 3.
வாணலியில் 3 டீஸ்பூன் நெய், 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் இரண்டையும் சேர்த்து நறுக்கிய பனீரைப் பொரித்து எடுக்கவும். குக்கரைத் திறந்து, பொரித்த பனீர் துண்டுகளைச் சேர்த்துக் கிளறிவிடவும்.சுவையான முருங்கைக்காய் பிரியாணி தயார்


No comments:
Post a Comment