சமைக்க தேவையானவை பச்சரிசி - 2 கப் சர்க்கரை - ஒரு கப் மில்க்மெய்ட் - அரை கப் வில்லைகளாக நறுக்கிய பைனாப்பிள் துண்டுகள் - 6 லெமன் ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை நெய் - 3 டேபிள்ஸ்பூன் ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை உணவு செய்முறை Step 1. முதலில் பைனாப்பிளை மிக்ஸியில் நைஸாக அரைத்து நீர் சேர்த்து சக்கையை வடிகட்டி, 2 கப் அளவு சாறு தயாரித்துக்கொள்ளவும் Step 2. வெறும் வாணலியில் பச்சரிசியை லேசாக வறுத்து, ஒரு கப் தண்ணீர், அரை கப் மில்க்மெய்ட், பைனாப்பிள் சாறு சேர்த்து குக்கரில் வேகவைக்கவும் Step 3. சர்க்கரையுடன் ஒரு டேபிள்ஸ்பூன் நீர் சேர்த்து கொதிக்கவிட்டு பாகு வைக்கவும் Step 4. அத்துடன் லெமன் ஃபுட்கலர், ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்து, சாதத்தையும் சேர்த்து எல்லாமாக ஒன்றுசேர்ந்து வந்ததும் இறக்கவும். சுவையான பைனாப்பிள் பிரியாணி தயார்.
No comments:
Post a Comment