செட்டிநாடு இறால் பிரியாணி



தேவையானவை

  •  பிரியாணி இலை - ஒன்று
  •  எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
  •  மராத்தி மொக்கு - ஒன்று லவங்கம் - 3
  •  மஞ்சள் தூள் - சிறிது சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி
  •  மல்லித் தழை, புதினா - ஒரு கைப்பிடி
  •  உப்பு ஊற வைக்க இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
  •  கறி தூள் - ஒரு தேக்கரண்டிதக்காளி - ஒன்று
  •  இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
  •  தயிர் - ஒரு மேசைக்கரண்டி
  •  பட்டை - சிறு துண்டு
  •  மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
  •  பச்சை மிளகாய் - 3
  •  பாசுமதி அரிசி - 2 கப்
  •  இறால் - அரை கிலோ
  •  வெங்காயம் - 2
  •  மஞ்சள் தூள் - சிறிது
  •  பிரியாணி மசாலா - அரை தேக்கரண்டி
  •  மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
  •  அன்னாசிப்பூ - பாதி
  •  ஏலக்காய் - 3


செய்முறை :

Step 1.
முதலில் இறாலை சுத்தம் செய்து ஊற வைக்க கொடுத்தவற்றை சேர்க்கவேண்டும் .பின் இதனை குறைந்தது ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின் பாசுமதி அரிசியை களைந்து 20 நிமிடம் ஊற விடவேண்டும் .பின் பச்சை மிளகாயை நசுக்கி வைக்கவேண்டும் .

Step 2.
பின்னர் வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவேண்டும் .

Step 3.
பின் வெங்காயம் முக்கால் பதம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, நசுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

Step 4.
பின் இறாலைச் சேர்த்து ஒரு முறை பிரட்டி விடவும். அதிகம் வதக்கக் கூடாது.தயிர் மற்றும் தூள் வகைகள் சேர்த்து பிரட்டவும்.பின் 2 கப் அரிசிக்கு 3 1/4 - 3 1/2 கப் நீர் விட்டு உப்பு, மல்லித் தழை புதினா சேர்த்து கொதிக்க விடவும்

Step 5.
.நன்றாக கொதி வந்ததும் அரிசியை சேர்த்து மீண்டும் ஒரு கொதி விடவும். பின் மூடி சிறுந்தீயில் வைக்கவேண்டும் .பின் முக்கால் பதம் வெந்ததும் தம்மில் போடவும்.சுவையான செட்டிநாடு இறால் பிரியாணி தயார்.


No comments:

Post a Comment

Adbox