செட்டிநாடு காடை பிரியாணி


தேவையானவை

  •  பிரிஞ்சி இலை - ஒன்று
  •  இஞ்சி, பூண்டு விழுது - 50 கிராம்
  •  நெய் - 50 மில்லி
  •  எண்ணெய் - 100 மில்லி
  •  பட்டை - 2
  •  ஏலக்காய் - 4
  •  இஞ்சி-1 துண்டு
  •  பூண்டு - 50 கிராம்
  •  கிராம்பு - 6
  •  மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
  •  மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
  •  பொடியாக நறுக்கிய தக்காளி - 100 கிராம்
  •  பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 5
  •  தயிர் - 50 மில்லி
  •  உப்பு - தேவையான அளவு
  •  தேங்காய்ப்பால் - 100 மில்லி
  •  கிராம்பு - 4
  •  காடை - 4
  •  பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 150 கிராம்
  •  சீரகச் சம்பா அரிசி - 750 கிராம்




செய்முறை :

Step 1.
முதலில் சீரகச் சம்பா அரிசியை 20 நிமிடம் ஊற வைக்கவேண்டும் .பின்னர் பிரியாணி மசாலா செய்ய கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் சிவக்க வறுத்து ஆறிய பின் , தண்ணீர் ஊற்றி மைய்யாக அரைத்துக் கொள்ளவேண்டும்

Step 2.
.பின் வாயகன்ற ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து வறுத்து, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக சிவக்க வறுக்கவும்.

Step 3.
பின் இதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாற வதக்கியதும், தக்காளி சேர்த்து அது கரையும் வரை வதக்கவும்.பிறகு கழுவி சுத்தம் செய்த காடையை இத்துடன் சேர்த்து வதக்கி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், அரைத்த பிரியாணி மசாலா சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவேண்டும் .

Step 4.
பின்னர் இத்துடன் தயிர், தேங்காய்ப்பால் தேவையான அளவு தண்ணீர், கழுவிய சீரகச் சம்பா அரிசியைச் சேர்த்து 10 நிமிடம் வேகவிடவும். .

Step 5.
பின்னர் தீயை மிதமாக்கி நெய் ஊற்றி கிளறி, புதினா இலை, கொத்தமல்லித்தழை தூவி மூடி போட்டு 20 நிமிடம் தம் போட்டு இறக்கிப் பரிமாறவும்

No comments:

Post a Comment

Adbox