தேவையானவை
- பாசுமதி அரிசி - 250 கிராம்
- முட்டைகோஸ் - 250 கிராம்
- வெங்காயம் - ஒன்று
- தயிர் - 3 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் - 3
- இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் அரைத்த விழுது - ஒரு டீஸ்பூன்
- தேங்காய்ப் பால் - அரை கப்
- கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு
- எண்ணெய் - 3 டீஸ்பூன்
- நெய் - 2 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
Step 1.
முதலில் அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை வதக்கி, முட்டைகோஸ் சேர்த்து மேலும் வதக்கவும். பின் இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்து வதக்கி, தயிர், தேங்காய்ப் பால் சேர்க்கவும்.
Step 2.
இதில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியை சேர்த்துக் கிளறி, வெந்ததும் பாத்திரத்தை மூடி, சிறு தீயில் சிறிது நேரம் வைத்து இறக்கி, பரிமாறவும்.


No comments:
Post a Comment