தேவையானவை
- பிரிஞ்சி இல - ஒன்று
- எண்ணெய் - அரை கப்
- சோம்பு - ஒரு ஸ்பூன்
- நெய் - அரை கப்
- ஏலக்காய் - 3
- கிராம்பு - 3
- பட்டை- 3 சிறிய துண்டு
- உப்பு - தேவையான அளவு
- புதினா - ஒரு கட்டு
- தயிர் - அரை கப்
- லெமன் - 1
- தக்காளி - 3
- பச்சை மிளகாய் - 4
- மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
- தேங்காய் - ஒரு மூடி மட்டன் - அரை கிலோ
- பெரிய வெங்காயம் - 4
- மிளகாய் தூள் 1 ஸ்பூன்
- சீரக சம்பா அரிசி - 4 கப்
- இஞ்சி, பூண்டு - 4 ஸ்பூன்
செய்முறை :
முதலில் மட்டனை நன்றாக கழுவி வைக்கவேண்டும் . பின்பு அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும். பிறகு தேங்காய் துருவலை மிக்சியில் போட்டு அரைத்து 4 கப் பால் எடுத்துக்கொள்ளவேண்டும் . பின்பு வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும் .
Step 2.
பின்பு குக்கரில் மட்டனை போட்டு அதனுடன் கால் கப் தயிர், மஞ்சள் தூள் மற்றும் இஞ்சி, பூண்டு விழுது 2 ஸ்பூன், உப்பு போட்டு நன்றாக கலந்து 5 விசில் வரும் வரை வேக வைக்கவேண்டும் .
Step 3.
பிறகு குக்கரை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் இரண்டையும் சேர்த்து ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்த பின் பச்சை மிளகாய், வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவேண்டும் .
Step 4.
பிறகு வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு விழுதைப் போட்டு வதக்கவேண்டும் . பின்பு இஞ்சி, பூண்டு பச்சை வாசனை போனவுடன் மிளகாய்தூள், மஞ்சள் தூள் போட்டு 5 நிமிடங்கள் வதக்கி எண்ணெய் பிரிந்ததும் நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவேண்டும் .
Step 5.
பிறகு தக்காளி நன்றாக வதங்கி கூழானதும் தயிர் சேர்க்கவும். பின்னர் அதில் தேங்காய்பால், மட்டன் வேக வைத்த தண்ணீர் இரண்டும் சேர்த்து 8 கப் அளந்து ஊற்றவேண்டும்
Step 6.
.பின் உப்பு, புதினா, கொத்தமல்லித்தழை சேர்க்கவும். பிறகு ஒரு கொதி வந்ததும் அரிசியை போட்டு அதனுடன் லெமன் சாறு சேர்த்து நன்கு கிளறி குக்கரை மூடி விசில் போட்டு அடுப்பை 10 நிமிடம் சிம்மில் வைத்து குக்கரை இறக்கவேண்டும் .
Step 7.
பிறகு 10 நிமிடம் கழித்து குக்கரை திறந்து ஒருமுறை கிளறி விட்டு பரிமாறவும்.


No comments:
Post a Comment