மொகல் பிரியாணி



தேவையானவை

  •  மிளகாய்த் தூள்- தேவைக்கேற்ப
  •  தேங்காய்ப் பால் -அரை மூடி துருவி,
  •  உப்பு – தேவைக்கேற்ப
  •  2 எலுமிச்சை பழங்களின் சாறு…
  •  பெரிய வெங்காயம்-1 கிலோ
  •  எண்ணை- 2 கப்
  •  தக்காளி- 1 கிலோ
  •  நெய்- 2கப்
  •  இஞ்சி, பூண்டு விழுது-1 1/2 கப்
  •  தயிர்- 2 கப்
  •  புதினா- 1கட்டு
  •  பட்டை, கிராம்பு ,ஏலம்- மூன்றும் சேர்த்து அரச்ச பொடி 1/2 கப்
  •  மல்லித்தழை- 1 கட்டு
  •  பாஸ்மதி அரிசி- 11/2 கிலோ
  •  11/2 கிலோ ஆட்டிறைச்சி
  •  ப.மிளகாய்- 7
  •  பால் பிழிந்தது, 1 கப்



செய்முறை :

Step 1.
முதலில் அடுப்பில் 12 லி குக்கரை ஏற்றி பாதி நெய்யையும் எல்லா எண்ணையையும் விடவும்.காய்ந்ததும், பட்டை கிராம்பு ஏலப் பொடியைப் போடவும்.பின்பு ப.மிளகாய், வெட்டிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.உடனே புதினா, மல்லி போட்டு வதக்கி, கறியையும் சேர்க்கவும்.

Step 2.
பின்புகறியோடு 1 மேஜைக் கரண்டி உப்பு சேர்க்கணும்.பிறகு, தக்காளி சேர்த்து, மிளகாய்த்தூள் சேக்கணும், தக்காளி கரஞ்சு, காரம் மேல மிதக்கும் போது இஞ்சி பூண்டு விழுது சேத்து , வதக்கணும்.அப்பறம் தயிர் சேத்து, வெயிட் போட்டு குக்கரை மூடவும். சத்தம் வந்து குறைத்து வைத்து, 10 நிமிடம் கழித்து திறக்கவும்.

Step 3.
பின்பு தேங்காய்ப் பாலும் தண்ணீருமா சேத்து, 11/2 கிலோ தண்ணீர் சேத்து, ஒரு கொதி வரும் முன்ன , கலஞ்சு, ஊற வச்சு இருக்குற அரிசிய , தண்ணி இல்லாம வடிச்சு, போடவும்அரிசியும் மசாலா தண்ணியுமா கொதிக்க ஆரம்பிக்கும். தண்ணியும் சோறுமா வத்தி வர எலுமிச்ச சாறு சேத்து, மீதம் உள்ள நெய்யையும் சேக்கனுங்கநல்லாகிளறி, குக்கர் மூடி போட்டு வெய்ட்டையும் போட்டு, மூடி, தீயக் கொறச்சு வச்சுடுங்க. மொகல் பிரியாணி ரெடி

No comments:

Post a Comment

Adbox