சேமியா மட்டன் பிரியாணி



தேவையானவை

 தேங்காய் - பாதி (பால் எடுக்கவும்)
 பச்சை மிளகாய் - 3
 உப்பு - தேவைக்கு
 தக்காளி - 200 கிராம்
 மல்லி,புதினா - கைபிடியளவு
 சிறிய எலுமிச்சை - பாதி
 தயிர் - 2 மேசைக்கரண்டி
 கரம் மசாலா - அரை தேக்கரண்டி
 வெங்காயம் - 150 கிராம்
 சில்லி பவுடர் - 1 1/2 தேக்கரண்டி
 நெய் - 50 மில்லி
 இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 மேசைக்கரண்டி
 மட்டன் - அரைக் கிலோ
 சேமியா - அரைக் கிலோ
 எண்ணெய் - 100 மில்லி


செய்முறை :

Step 1.
முதலில் மட்டனை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ளவேண்டும் . பின்பு மட்டனுடன் அரை தேக்கரண்டிமிளகாய் தூள் , அரை மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, 2 மேசைக்கரண்டி தயிர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி சிறிது நேரம் ஊற வைக்கவேண்டும்.

Step 2.
பின் தேங்காயை துருவி பால் எடுத்துக் கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் சேமியாவை போட்டு சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவேண்டும் . பின்பு வெங்காயம், தக்காளி, மல்லி, புதினா ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவேண்டும் . மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

Step 3.
இப்பொழுது குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் சிவந்தவுடன் இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கி 2 நிமிடம் வைக்கவேண்டும் .

Step 4.
பின்பு மல்லி, புதினா, மிளகாய், தக்காளி, சில்லி பவுடர், உப்பு சேர்த்து வதக்கி எல்லாம் சேர்ந்ததும் எண்ணெய் தெளிந்து வரும்.இப்பொழுது ஊற வைத்திருக்கும் மட்டனை அதனுடன் சேர்த்து குக்கரை மூடி மூன்று விசில் வைத்து திறக்கவேண்டும் .

Step 5.
பின் மட்டன் வெந்ததும் மசாலாவுடன் இருக்கும் மட்டனை வேறு பாத்திரத்திற்கு மாற்றவும். ஓரளவு தண்ணீர் மட்டனில் இருக்கும்.

Step 6.
மீதி தண்ணீருக்கு தேங்காய் பாலுடன் தண்ணீரை சேர்த்து அளந்து வைக்கவேண்டும் . தண்ணீரின் அளவு - சேமியா ஒன்றுக்கு ஒன்றரை அளவு தண்ணீர்.

Step 7.
பின்னர் பாதி எலுமிச்சை பழத்தை விதை நீக்கி அதில் பிழியவும். கொதி வந்தவுடன் அதில் வறுத்து வைத்திருக்கும் சேமியாவை சேர்க்கவேண்டும் . பிறகு பாத்திரத்தை மூடி வைத்து 10 நிமிடம் சிம்மில் வைத்து சேமியாவை வேக விடவும். சேமியா வெந்ததும் சிறிது நேரம் கழித்து மூடியை திறந்து ஒரு முறை கிளறி விடவும். சுவையான சேமியா மட்டன் பிரியாணி ரெடி.

No comments:

Post a Comment

Adbox