தேவையானவை
- புதினா, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு
- பாசுமதி அரிசி - 250 கிராம்
- காளான் – 10
- உப்பு - தேவையான அளவு
- வெங்காயம் – ஒன்று
- தக்காளி – 2
- எண்ணெய் - 3 டீஸ்பூன்
- நெய் - 2 டீஸ்பூன்
- அரைக்க : சோம்பு, சீரகம் - தலா கால் டீஸ்பூன்
- அரைக்க : இஞ்சி - சிறிய துண்டு
- அரைக்க : பட்டை - 2 துண்டு
- அரைக்க : பூண்டு - 10 பல்
- அரைக்க : கிராம்பு – 2
- அரைக்க : மிளகு, மிளகாய்த்தூள் - தலா அரை டீஸ்பூன்
- அரைக்க : தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன்
- அரைக்க : தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்
- அரைக்க : மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
- அரைக்க : ஏலக்காய் - 2.
செய்முறை :
Step 1.
ஒரு பாத்திரத்தில் அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அரைக்கக் பின்பு கொடுத்துள்ளவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும்,
Step 2.
. அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் நெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
Step 3.
பின்னர் அரைத்த விழுது, நறுக்கிய தக்காளி, காளான், உப்பு, புதினா, கொத்தமல்லி எல்லாம் சேர்த்து நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்
Step 4.
. அதன்பின் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், ஊற வைத்த அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.


No comments:
Post a Comment