தேவையானவை
- தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
- எள் - ஒரு டீஸ்பூன்
- பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை.
- மிளகு – 10
- காய்ந்த மிளகாய் – 3
- வெந் தயம் - கால் டீஸ்பூன்
- உப்பு - தேவைக்கேற்ப.
- எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
- கொத்தமல்லித் தழை – சிறிதளவு
- ஊறவைத்த பச்சைப் பட்டாணி - 3 டேபிள்ஸ்பூன்
- கேரட் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
- பச்சை மிளகாய் – ஒன்று
- ஜாதி நார்த்தங்காய் சாறு - 6 டேபிள்ஸ்பூன் (கசப்பில்லாததாக இருக்க வேண்டும்)
- பச்சரிசி - ஒரு கப்
- மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
செய்முறை :
Step 1.
முதலில் பச்சரிசியை வெறும் வாணலியில் வறுத்து...அதில் உப்பு, 2 கப் நீர் சேர்த்து, பட்டாணியையும் சேர்த்து உதிர் உதிராக வேகவிடவும்.பின் அரை டீஸ்பூன் எண்ணெயில் வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்து மிக்ஸியில் சற்றுக் கொரகொரப்பாகப் பொடிக்கவும்.
Step 2.
வாணலியில் மீதியுள்ள எண்ணெயை விட்டு, நறுக்கிய பச்சை மிளகாய், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் போட்டு, கேரட் துருவல் சேர்த்து லேசாக வதக்கி, வறுத்து அரைத்த பொடியைத் தூவி இறக்கிவிடவும்.
Step 3.
இதனுடன் நார்த்தங்காய் சாறு சேர்க்கவும். பிறகு, உதிர் உதிராக வடிந்த சாதத்தைச் சேர்த்துக் கலக்கவும். கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.சுவையான நாரத்தங்காய் பிரியாணி தயார்


No comments:
Post a Comment