தேவையானவை
- பாசுமதி அரிசி - ஒரு கப்
- கீறிய பச்சை மிளகாய் – 4
- எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
- வெங்காயம், தக்காளி - தலா 1
- இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
- மஞ்சள்தூள்- கால் டீஸ்பூன்
- புதினா- சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு.
- தாளிக்க: பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை.
- உருண்டைகள் செய்யவதற்கு :முள் இல்லாத மீன்
- உருண்டைகள் செய்யவதற்கு :அரை கிலோ,
- உருண்டைகள் செய்யவதற்கு :இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
- உருண்டைகள் செய்யவதற்கு :பச்சைமிளகாய் - 2
- உருண்டைகள் செய்யவதற்கு :நறுக்கிய வெங்காயம் - 1,
- உருண்டைகள் செய்யவதற்கு :கடலை மாவு ஒரு டேபிள்ஸ்பூன்,
- உருண்டைகள் செய்யவதற்கு :கடலை மாவு ஒரு டேபிள்ஸ்பூன்,
- உருண்டைகள் செய்யவதற்கு :கொத்தமல்லி –சிறிதளவு
- உருண்டைகள் செய்யவதற்கு : உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை :
Step 1.
முதலில் முள் இல்லாத மீன் துண்டுகளை வேக வைத்து உதிர்த்துக் எடுத்து கொள்ளவும்.
Step 2.
இதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு, இஞ்சி-பூண்டு விழுது, கடலை மாவு சேர்த்து கிளறவும். ஆறியதும் கொத்தமல்லி சேர்த்து உருண்டைகளாக்கி, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
Step 3.
வாய் அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயை சூடாக்கி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை போட்டுத் தாளிக்கவும்.
Step 4.
பிறகு இதனுடன் வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து கிளறவும். மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறி, ஊற வைத்த அரிசியைப் போட்டு தேவையான தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
Step 5.
முக்கால் பதத்தில் வெந்ததும், பொரித்து வைத்துள்ள மீன் உருண்டைகளைப் போட்டு குறைந்த தீயில் வேகவிடவும். வெந்ததும் புதினா, கொத்தமல்லி தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.,


No comments:
Post a Comment