ட்ரை ஃப்ரூட் பிரியாணி



தேவையானவை

  •  பாதாம், முந்திரி, பிஸ்தா - தலா 5.
  •  கசகசா - ஒரு டீஸ்பூன்
  •  பட்டை - ஒரு துண்டு
  •  நெய், உப்பு - தேவையான அளவு.
  •  திராட்சை - ஒரு டீஸ்பூன்
  •  கீறிய பச்சை மிளகாய், ஏலக்காய் - தலா 1
  •  பாசுமதி அரிசி, பால் - தலா ஒரு கப்
  •  கிராம்பு - 2



செய்முறை :

Step 1.
முதலில் வெந்நீரில் கசகசாவை ஊற வைக்கவும். ஊறியவுடன், தண்ணீரை வடிகட்டி பாதம், முந்திரி, பிஸ்தா சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்

Step 2.
. அரிசியைக் கழுவி, 10 நிமிடம் ஊற வைக்கவும். குக்கரில் நெய் விட்டு பட்டை, ஏலக்காய், கிராம்பு தாளித்து, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

Step 3.
திராட்சை சேர்த்து அது பொரிந்தவுடன், ஊறிய அரிசியைப் போட்டு... உப்பு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் பாலையும் அரைத்த விழுதையும் சேர்த்து நன்றாகக் கலந்து, தேவையெனில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடவும். மிதமான தீயில் ஒரு விசில் வரும் வரை வேக வைத்து, ஆவி போனதும் திறந்து பரிமாறவும்

No comments:

Post a Comment

Adbox