தேவையானவை
- இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்,
- உப்பு, எண்ணெய், நெய் – தேவையான அளவு,
- நெய்யில் வறுத்த முந்திரி – 10.
- பெரிய வெங்காயம் – 3,
- தேங்காய்ப்பால் – அரை கப்,
- பட்டை – சிறு துண்டு,
- பிரிஞ்சி இலை – ஒன்று,
- லவங்கம், ஏலக்காய் – தலா ஒன்று,
- பச்சை மிளகாய் – 5,
- புதினா, கொத்தமல்லித்தழை – தலா ஒரு கைப்பிடி அளவு,
பாசுமதி அரிசி – 2 கப்,
செய்முறை :
Step 1.
முதலில் பெரிய வெங்காயத்தை நீளமாக, மெல்லியதாக நறுக்கவும்.பின்பு பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும். புதினா, கொத்தமல்லித்தழையை மிகவும் பொடியாக நறுக்கவும்.
Step 2.
பட்டை, லவங்கம், ஏலக்காயை பொடித்துக்கொள்ளவும்.குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பிரிஞ்சி இலை, பொடித்த பட்டை, லவங்கம், ஏலக்காய், இஞ்சி – பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்., நறுக்கிய வெங்காயம், தேவையான உப்பு, புதினா, கொத்தமல்லித்தழை, கீறிய பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒவ்வொ
Step 3.
ன்றாக சேர்த்துக் கிளறவும்.இதனுடன் தேங்காய்பால், இரண்டரை கப் நீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் கழுவிய பாசுமதி அரிசியை சேர்த்து நன்றாக கிளறி குக்கரை மூடவும். ஆவி வந்ததும் `வெயிட்’ போட்டு, அடுப்பை `சிம்’மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.பின்பு பரிமாறவும்


No comments:
Post a Comment