தேவையானவை
- பிரிஞ்சி இலை - ஒன்று,
- பிரியாணி மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்,
- பூண்டு - 6 பல்,
- ஏலக்காய் - 2,
- மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
- நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
- பெரிய வெங்காயம் - ஒன்று
- பச்சை மிளகாய் - 3
- சோம்பு - அரை டீஸ்பூன்,
- பட்டை - சிறிய துண்டு,
- கேரட் - 1
- பச்சைப் பட்டாணி - 50 கிராம்,
- கொத்தமல்லித்தழை, புதினாத்தழை - சிறிதளவு
- பீன்ஸ் - 10
- தக்காளி - ஒன்று
- ராகி சேமியா - ஒரு கப்,
செய்முறை :
Step 1.
முதலில் வெங்காயம், கேரட், பீன்ஸ், தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். சேமியாவை வெறும் கடாயில் போட்டு சிறிது வதக்கி கொள்ளவேண்டும் .
Step 2.
. பின் வாணலியில் நல்லெண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், சோம்பு, பூண்டு, பிரிஞ்சி இலை போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவேண்டும் . பின்னர் வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவேண்டும்
Step 3.
. பின் தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் பச்சைப் பட்டாணி, பீன்ஸ், கேரட், புதினா, மஞ்சள்தூள் சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு காய்கறிகள் சற்று வதங்கியதும் இதில் 2 கப் நீர் விட்டு, பிரியாணி மசாலாத்தூள், உப்பு சேர்த்து, சிறிதளவு நல்லெண்ணெய் விடவேண்டும் .
Step 4.
இப்பொழுது தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் ராகி சேமியாவைப் போட்டு கிளறி, வெந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்


No comments:
Post a Comment