தேவையானவை
- உப்பு - தேவையான அளவு
- கிராம்பு - 2
- தண்ணீர் - 4 கப்
- தயிர் ஆடை - ஒரு மேசைக்கரண்டி (விரும்பினால்)
- ஏலக்காய் - 2
- பூண்டு - 6 பற்கள்
- சோம்பு - ஒரு மேசைக்கரண்டி
- இஞ்சி - சிறு துண்டு
- வரமிளகாய் - 4 (காரத்திற்கேற்ப அவரவர் விருப்பப்படி)
- குதிரைவாலி - 2 கப்
- தக்காளி - 2
- கேரட், பீன்ஸ் - 250 கிராம்
- பீட்ரூட் - ஒன்று
- பட்டை - சிறு துண்டு
- பெரிய வெங்காயம் - 2
- எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு
செய்முறை :
Step 1.
முதலில் பெரிய வெங்காயத்தை நீளவாக்கிலும், தக்காளியைப் பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவேண்டும் .பின் காய்கறிகளைச் சுத்தம் செய்து தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும்.
Step 2.
பின்னர் மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, ஏலக்காய், அரை மேசைக்கரண்டி சோம்பு, கிராம்பு, பட்டை ஆகியவற்றைப் போட்டு நைசாக அரைத்தெடுக்கவேண்டும் .
Step 3.
நறுக்கி வைத்துள்ள தக்காளியில் பாதியளவு சேர்த்து அரைத்தால் விழுது நன்றாக இருக்கும். பின் குதிரைவாலியை நன்றாகக் களைந்து 4 கப் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவேண்டும் .
Step 4.
பிறகு ஒரு கப் குதிரைவாலிக்கு 2 கப் தண்ணீர் ஊற்றவும் இப்பொழுது குக்கரில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு போட்டு பொரியவிட்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
Step 5.
பிறகு வெங்காயம் வதங்கியவுடன் அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும். பின் அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கி விட்டு, பின்னர் அனைத்து காய்கறிகளையும் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும் .
Step 6.
பின்பு பாதியளவு தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து காய்கறிகளை வேக விடவும். காய்கறிகள் அரை பதமாக வெந்த பின் குதிரைவாலியைப் போட்டு, மீதமுள்ள தண்ணீரை ஊற்றி நன்றாக கலந்துவிட்டு வைக்கவும்.
Step 7.
ஒரு கொதி வந்தவுடன் கலவையை நன்றாக கிளறி விட்டு, மூடி போட்டு வெயிட் போடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கி வைக்கவும். 5 நிமிடம் கழித்து வெயிட் நீக்கி, வெந்த குதிரைவாலி பிரியாணியை நன்றாக கிளறி பரிமாறவும்


No comments:
Post a Comment