தேவையானவை
- சீரகம் - கால் டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - 3
- நெய், உப்பு - தேவையான அளவு,
- தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்
- பட்டை, ஏலக்காய், கிராம்பு - தலா 1
- புதினா, கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாய் (நான்கும் அரைத்த விழுது) - ஒரு டீஸ்பூன்
- நறுக்கிய வெங்காயம் - கால் கப்
- துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா கால் கப்
- பாசுமதி அரிசி - ஒரு கப்
செய்முறை :
Step 1.
முதலில் இரண்டு பருப்புகளையும் அரை மணி நேரம் ஊற வைக்கவேண்டும் .பின் தண்ணீரை வடித்து, அதனுடன் தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்துக் கரகரப்பாக அரைக்கவும். அதனை இட்லி பாத்திரத்தில் இட்லியாக ஊற்றி அவித்து, உதிர்த்து வைக்கவும்.
Step 2.
பிறகு குக்கரில் நெய் விட்டு... சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து... வெங்காயம், அரைத்த விழுதைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
Step 3.
பின் ஊற வைத்து, நெய்யில் வறுத்த அரிசியைப் போட்டு... உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடவும். குக்கர் வெயிட் போடாமல் மிதமான தீயில் 5 நிமிடம் வேக வைக்கவும். பிறகு, குக்கரைத் திறந்து... உதிர்த்து வைத்துள்ள பருப்புக் கலவையை சேர்த்துக் கலந்து, குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.


No comments:
Post a Comment