தேவையானவை
- பால் - 50 மில்லி
- குங்குமப்பூ - சிறிதளவு
- பாதாம் - 10 கிராம்
- அன்னாசிப்பழம் - ஒன்றில் பாதி
- எண்ணெய் - 100 கிராம்
- ஆப்பிள் - ஒன்றில் பாதி (சிறு துண்டுகளாக்கவும்)
- பட்டை - 1
- பிரிஞ்சி இலை - 1
- முந்திரி - 10 கிராம்
- கிராம்பு - 2
- ஏலக்காய் - 2
- புதினா இலை - 50 கிராம்
- இஞ்சி-பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
- கொத்தமல்லித்தழை - 50 கிராம்
- பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 3
- பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2
- நெய் - 50 மில்லி
- உப்பு - தேவையான அளவு
செய்முறை :
Step 1.
முதலில் பாலில் குங்குமப்பூவை சிறிது நேரம் ஊற வைக்கவேண்டும் . பின்பு அன்னாசிப்பழத்தை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக்கவும்.
Step 2.
பின் பாஸ்மதி அரிசியை 30 நிமிடம் ஊற வைக்கவேண்டும் .பின்னர் அடுப்பில் வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும்.
Step 3.
பிறகு இத்துடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கியதும், வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.பின்னர் இத்துடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, பாஸ்மதி அரிசி, உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வேகவிடவும்.
Step 4.
பிறகு முந்திரி, பாதாம், குங்குமப்பூ சேர்த்த பால், நெய் சேர்த்துக் கிளறவும். இத்துடன் ஆப்பிள், அன்னாசி, திராட்சை, உலர் திராட்சை, கொத்தமல்லித்தழை, புதினா இலை தூவி மூடவும்.
Step 5.
பின்பு அடுப்பில் ஒரு பெரிய தோசைக்கல்லை வைத்து தீயை முற்றிலும் குறைத்து அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைத்து 20 நிமிடம் ‘தம்’ போட்டு இறக்கிப் பரிமாறவும்.


No comments:
Post a Comment