புதினா பிரியாணி


தேவையானவை


  •  பசுமதி அரிசி - 250 கிராம்,
  •  தயிர் - 2 டீஸ்பூன்,
  •  மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்
  •  தேங்காய்ப் பால் அரை கப்
  •  வெங்காயம் ஒன்று
  •  உரித்த பச்சைப் பட்டாணி கால் கப்
  •  நெய் - 2 டீஸ்பூன்
  •  எண்ணெய் - 3 டீஸ்பூன் , உப்பு - தேவையான அளவு.
  •  அரைக்க : புதினா - 2 கைப்பிடி அளவு
  •  அரைக்க : கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு
  •  அரைக்க : பச்சை மிளகாய் – 3
  •  அரைக்க : பட்டை - 2 துண்டு
  •  அரைக்க : கிராம்பு
  •  அரைக்க : ஏலக்காய் - தலா 2,
  •  அரைக்க : இஞ்சி - சிறிய துண்டு,
  •  அரைக்க : பூண்டு - 10 பல்



செய்முறை :

Step 1.
ஒரு பாத்திரத்தில் அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும்.பின்பு அரைக்க கொடுத்துள்ளவற்றை ஒன்று சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்..

Step 2.
பின்பு பாத்திரத்தை அடுப்பில் வைத்து , நெய், எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிகொள்ளவும்

Step 3.
. இதனுடன் அரைத்த விழுதை சேர்த்து எண்ணெய் மிதந்து வரும் வரை வதக்கி, தேங்காய்ப் பால், தயிர் சேர்த்து வதக்கவும். பிறகு, பட்டாணி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

Step 4.
இதில் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து, கொதித்தும் ஊற வைத்த அரிசி சேர்த்து, வெந்ததும் இறக்கி பரிமாறவும்.

No comments:

Post a Comment

Adbox