தேவையானவை
- பாசுமதி அரிசி - ஒரு கில
- கொத்துமல்லித்தழை - ஒரு கொத்து
- இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
- மட்டன் ஒரு கிலோ
- வெங்காயம் - அரை கிலோ
- நெய் - 50 மில்லி
- எலுமிச்சை -அரை பழம்
- தக்காளி - அரை கிலோ
- எண்ணெய் - 200 மில்லி
- பச்சை மிளகாய் ஆறு
- காஷ்மீரி சில்லி மிளகாய் தூள் 2 தேக்கரண்டி
- பிரியாணி இலை
- தயிர் ஒரு கோப்பை
- புதினா -ஒரு கொத்து
- பட்டை, ஏலம், கிராம்பு -தலா இரண்டு
- உப்பு தூள் -தேவையான அளவு
செய்முறை :
Step 1.
முதலில் பிரியாணி செய்ய அரிசியை தண்ணீரில் கழுகி ஒரு பாத்திரத்தில் ஊற வைக்கவும். பின்பு மட்டனை நன்கு கழுவி தண்ணீரை வடிக்கவும்.
Step 2.
பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாத்திரம் சுடானதும் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, ஏலம், கிராம்பு , பிரியாணி இலை போட்டு வெடிக்க விட்டு .பின்பு அறிந்து வைத்துள்ள வெங்காயத்தை எண்ணெயுடன் சேர்த்து நன்கு வதக்கவும்.
Step 3.
அதன் பிறகு வெங்காயம் வதக்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி மிளகாய் தூள், பழுத்த பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
Step 4.
பிறகு புதினா, தயிர் சேர்க்கவும், அடுத்து தக்காளியும் கொத்துமல்லியும் சேர்க்கவும். அடுத்து உப்பு, மட்டன் சேர்த்து நன்கு கிளறி, தீயை சிம்மில் வைத்து மட்டனை வேக விடவும். மட்டன் வெந்து கூட்டு கிரேவி பதம் வரும் வரை வேக விடவும்.
Step 5.
மட்டன் அதிகமாக இருந்தால் அதற்கு தகுந்தாற் போல் தண்ணீர் சேர்க்கவும் . ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்னேகால் வீதம் தண்ணீர் அளந்து ஊற்றவும். தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அரிசியை நன்கு அலசி போட்டு கொதிக்கவிட்டு கடைசியாக சிறிது நெய், லெமன் பிழிந்து, பாதி அளவு வற்றும் போது அடுப்பின் மேல் தம் போடும் கருவியை வைத்து சாப்பாடு சட்டியின் மேல் கனமான பாத்திரத்தை வைத்து 20 நிமிடம் தம்மில் விடவும்.பிறகு லேசாக மேலிருந்து கீழாக சாதம் குழையாமல் பிரட்டி எடுக்கவும்.
Step 6.
சுவையான ஆம்பூர் ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி ரெடி.


No comments:
Post a Comment